எண்ணில் புன்தொழில் எய்தி ஐயவோ இயல்பின் வாழ்க்கையில் இயங்கி மாழ்கியே கண்ணின் உண்மணி யாய நின்தனைக் கருதி டாதுழல் கபட னேற்கருள் நண்ணி வந்திவன் ஏழை யாம்என நல்கி ஆண்டிடல் நியாய மேசொலாய் தண்இ ரும்பொழில் சூழும் போரிவாழ் சாமி யேதிருத் தணிகை நாதனே