பாடல் எண் :3898
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
உண்ணுகின்றேன் உண்ணஉண்ண ஊட்டுகின்றான் - நண்ணுதிருச்
சிற்றம் பலத்தே திருநடஞ்செய் கின்றான்என்
குற்றம் பலபொறுத்துக் கொண்டு
பாடல் எண் :4044
எண்ணுகின்றேன் எண்ணுதொறென் எண்ணமெலாம் தித்திக்க
நண்ணுகின்ற தென்புகல்வேன் நானிலத்தீர் - உண்ணுகின்ற
உள்ளமுதோ நான்தான் உஞற்றுதவத் தாற்கிடைத்த
தெள்ளமுதோ அம்பலவன் சீர்
பாடல் எண் :5489
எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்
பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் - உண்ணுகின்றேன்
தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்
வள்ளல்நட ராயன் மகிழ்ந்து
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.