எண்ணேர் மறையின் பயனே சரணம் பதியே பரமே சரணம் சரணம் விண்ணேர் ஒளியே வெளியே சரணம் வெளியின் விளைவே சரணம் சரணம் உண்ணேர் உயிரே உணர்வே சரணம் உருவே அருவே உறவே சரணம் கண்ணே மணியே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்