எத்தனை நான்குற்றம் செய்தும் பொறுத்தனை என்னைநின்பால் வைத்தனை உள்ளம் மகிழ்ந்தனை நான்சொன்ன வார்த்தைகள்இங் கத்தனை யும்சம் மதித்தருள் செய்தனை அம்பலத்தே முத்தனை யாய்நினக் கென்மேல் இருக்கின்ற மோகம்என்னே