எத்தாலும் மிக்க தெனக்கருள் ஈந்ததெல் லாமும்வல்ல சித்தாடல் செய்கின்ற தெல்லா உலகும் செழிக்க வைத்த தித்தா ரணிக்கணி ஆயது வான்தொழற் கேற்றதெங்கும் செத்தால் எழுப்புவ துத்தர ஞான சிதம்பரமே
எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே எல்லா உலகும் இயம்புதல் சும்மா செத்தாரை மீட்பது பாரீர் - திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி