எந்தாய்நின் அன்பர்தமக் கின்னமுதம் இட்டேத்திச் சிந்தா நலமொன்றுஞ் செய்தறியேன் - நந்தாச் சுவருண்ட மண்போலும் சோறுண்டேன் மண்ணில் எவருண் டெனைப்போல் இயம்பு