எந்தை யேதில்லை எம்இறை யேகுகன் தந்தை யேஒற்றித் தண்அமு தேஎன்தன் முந்தை ஏழ்பவ மூடம யக்கறச் சிந்தை ஏதம்தி ருந்தஅ ருள்வையே