எந்தைஎன் குருவே என்னுயிர்க் குயிரே என்னிரு கண்ணினுள் மணியே இந்துறும் அமுதே என்னுயிர்த் துணையே இணையிலா என்னுடை அன்பே சொந்தநல் உறவே அம்பலத் தரசே சோதியே சோதியே விரைந்து வந்தருள் என்றேன் வந்தருட் சோதி வழங்கினை வாழிநின் மாண்பே