எந்தைபிரான் என்இறைவன் இருக்க இங்கே என்னகுறை நமக்கென்றே இறுமாப் புற்றே மந்தஉல கினில்பிறரை ஒருகா சுக்கும் மதியாமல் நின்அடியே மதிக்கின் றேன்யான் இந்தஅடி யேனிடத்துன் திருவு ளந்தான் எவ்வாறோ அறிகிலேன் ஏழை யேனால் சிந்தைமகிழ்ந் தருட்குருவாய் என்னை முன்னே சிறுகாலை ஆட்கொண்ட தேவ தேவ