எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன் சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே