எனக்கு நீர் இங்கோர் ஆண்டைஅல் லீரோ என்னை வஞ்சகர் யாவருங் கூடிக் கனக்கும் வன்பவக் கடலிடை வீழ்த்தக் கண்டி ருத்தலோ கடன்உமக் கெளியேன் தனக்கு மற்றொரு சார்பிருந் திடுமேல் தயவு செய்திடத் தக்கதன் றிலைகாண் மனக்கு நல்லவர் வாழ்ஒற்றி உடையீர் வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே