எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்த மோ இந்தப் பொருத்தம் உலகில் பிறருக் கெய்தும் பொருத்த மோ கண்ணிகள்
எனக்கும் நின்னைப் போல நுதற்கண் ஈந்துமதனை யே எரிப்பித் தாய்பின் எழுப்பிக் கொடுத்தாய் அருவ மதனை யே சினக்குங் கூற்றை உதைப்பித் தொழித்துச் சிதைவு மாற்றி யே தேவர் கற்பம் பலவும் காணச் செய்தாய் போற்றி யே எனக்கும் உனக்கும்