எனையடைந் தாழ்த்திய துன்பச் சுமையை இறக்கெனவே நினையடைந் தேன்அடி நாயேற் கருள நினைதிகண்டாய் வினையடைந் தேமன வீறுடைந் தேநின்று வேற்றவர்தம் மனையடைந் தேமனம் வாடல்உன் தொண்டர் மரபல்லவே