எனையறியாப் பருவத்தே ஆண்டு கொண்ட என்னரசே என்குருவே இறையே இன்று மனையறியாப் பிழைகருது மகிழ்நன் போல மதியறியேன் செய்பிழையை மனத்துட் கொண்டே தனையறியா முகத்தவர்போல் இருந்தாய் எந்தாய் தடங்கருணைப் பெருங்கடற்குத் தகுமோ கண்டாய் அனையறியாச் சிறுகுழவி யாகி இங்கே அடிநாயேன் அரற்றுகின்றேன் அந்தோ அந்தோ