என்அறிவை உண்டருளி என்னுடனே கூடி என்இன்பம் எனக்கருளி என்னையுந்தா னாக்கித் தன்அறிவாய் விளங்குகின்ற பொன்னடிகள் வருந்தத் தனிநடந்து தெருக்கதவந் தாள்திறப்பித் தருளி முன்னறிவில் எனைஅழைத்தென் கையில்ஒன்று கொடுத்த முன்னவநின் இன்னருளை என்எனயான் மொழிவேன் மன்அறிவுக் கறிவாம்பொன் னம்பலத்தே இன்ப வடிவாகி நடிக்கின்ற மாகருணை மலையே