Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1608
என்ஆ ருயிர்க்கோர் துணையானார் 

என்ஆண் டவனார் என்னுடையார் 
பொன்னார் ஒற்றி நகர்அமர்ந்தார் 

புணர்வான் இன்னும் போந்திலரே 
ஒன்னார் எனவே தாயும்எனை 

ஒறுத்தாள் நானும் உயிர்பொறுத்தேன் 
தென்னார் குழலாய் என்னடிநான் 

செய்வ தொன்றும் தெரிந்திலனே
பாடல் எண் :2683
என்ஆ ருயிருக் குயிர்அனையாய் என்னைப் பொருளாய் எண்ணிமகிழ்ந்
தந்நாள் அடிமை கொண்டளித்தாய் யார்க்கோ வந்த விருந்தெனவே
இந்நாள் இரங்கா திருக்கின்றாய் எங்கே புகுவேன் என்புரிவேன்
நின்னால் அன்றிப் பிறர்தம்மால் வேண்டேன் ஒன்றும் நின்மலனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.