என்ஆசை எல்லாம்தன் அருள்வடிவந் தனக்கே எய்திடச்செய் திட்டருளி எனையும்உடன் இருத்தித் தன்ஆசை எல்லாம்என் உள்ளகத்தே வைத்துத் தானும்உடன் இருந்தருளிக் கலந்தபெருந் தகையே அன்னாஎன் ஆருயிரே அப்பாஎன் அமுதே ஆவாஎன் றெனையாண்ட தேவாமெய்ச் சிவமே பொன்னாரும் பொதுவில்நடம் புரிகின்ற அரசே புண்ணியனே என்மொழிப்பூங் கண்ணியும்ஏற் றருளே