என்இறைவன் வருதருணம் இதுகண்டாய் இதற்கோர் எட்டுணையும் ஐயமிலை என்னுள்இருந் தெனக்கே தன்னருள்தெள் அமுதளிக்கும் தலைவன்மொழி இதுதான் சத்தியம்சத் தியம்நெஞ்சே சற்றும்மயக் கடையேல் மன்னுலகத் துயிர்கள்எலாம் களித்துவியந் திடவே வகுத்துரைத்துத் தெரிந்திடுக வருநாள்உன் வசத்தால் உன்னிஉரைத் திடமுடியா தாதலினால் இன்றே உரைத்திடுதல் உபகாரம் உணர்ந்திடுக விரைந்தே