என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற் றிருள்இர வொழிந்தது முழுதும் மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன் மங்கல முழங்குகின் றனசீர்ப் பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப் பூவையர் புணர்ந்திடப் போந்தார் சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி துலங்கவந் தருளுக விரைந்தே