என்என் றேழையேன் நாணம்விட் டுரைப்பேன் இறைவ நின்றனை இறைப்பொழு தேனும் உன்என் றால்என துரைமறுத் தெதிராய் உலக மாயையில் திலகமென் றுரைக்கும் மின்என் றால்இடை மடவியர் மயக்கில் வீழ்ந்தென் நெஞ்சகம் ஆழ்ந்துவிட் டதனால் உன்அன் பென்பதென் னிடத்திலை யேனும் உனைஅ லால்எனை உடையவர் எவரே