என்கணவர் பெருந்தன்மை ஆறந்த நிலைக்கே எட்டிநின்று பார்ப்பவர்க்கும் எட்டாதே தோழி பொன்கணவர் கலைமடந்தை தன்கணவர் முதலோர் புனைந்துரைக்கும் கதைபோல நினைந்துரைக்கப் படுமோ புன்கணவர் அறியாதே புலம்புகின்றார் அவர்போல் புகல்மறையும் ஆகமமும் புலம்புகின்ற தம்மா உன்கணவர் திறம்புகல்என் றுரைக்கின்றாய் நீதான் உத்தமனார் அருட்சோதி பெற்றிடமுன் விரும்பே