பாடல் எண் :1701
என்கண் அனையார் மலைமகளை இச்சித் தணைந்தார் ஆனாலும்
வன்கண் அடையார் தீக்கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும்
புன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும்
கன்னல் மொழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே
பாடல் எண் :4417
என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய
என்கண் ணனையீரே வாரீர்
மின்கண் ணுதலீரே வாரீர் வாரீர்
பாடல் எண் :4991
என்கண் மணியுள் இருக்கும் தலைவ நின்னைக் காண வே
என்ன தவஞ்செய் தேன்முன் அயனும் அரியும் நாண வே
புன்கண் ஒழித்துத் தெள்ளார் அமுதம் புகட்டி என்னை யே
பொருளாய் எண்ணி வளர்க்கின் றாய்நீ எனக்கோர் அன்னை யே எனக்கும் உனக்கும்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.