Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :5818
என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார் 

இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார் 
பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது 

பேர்உடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார் 
தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான் 

சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே 
மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே 

வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே()   
 () இத்திருப்பாட்டின் இறுதியில் "இங்ஙனம் எல்லாம் வல்லவர் ஓதுக என்றபடி 
உரைத்துளேன்" என அடிகள் எழுதியருளியுள்ளதாக ஆபா குறிப்பிட்டுள்ளார்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.