என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி என்னைவாழ் விக்கின்ற பதியைப் பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே பொருந்திய மருந்தையென் பொருளை வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க வைத்தசன் மார்க்கசற் குருவைக் கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக் கோயிலில் கண்டுகொண் டேனே