என்செய்கை என்செய்கை எந்தாய்நின் பொன்அடிக் கேஅலங்கல் வன்செய்கை நீங்க மகிழ்ந்தணி யேன்துதி வாய்உரைக்க மென்செய்கை கூப்ப விழிநீர் துளித்திட மெய்சிலிர்க்கத் தன்செய்கை என்பதற் றேதணி காசலம் சார்ந்திலனே