என்நாணை அறிந்தும்என்னை அந்தோ அந்தோ இவ்வகைசெய் திடத்துணிந்தாய் என்னே எந்தாய் நின்ஆணை நின்னையலா தொன்றும் வேண்டேன் நீஇதனை அறிந்திலையோ நினைப்பிக் கின்ற மன்னாஎன் ஆருயிர்க்கு வாழ்வே என்கண் மணியேஎன் குருவேஎன் மருந்தே இன்னும் உன்னால்இங் குயிர்தரித்து வாழ்கின் றேன்என் உள்ளம்அறிந் துதவுதியோ உணர்கி லேனே