என்நிகர் இல்லா இழிவினேன் தனைமேல் ஏற்றினை யாவரும் வியப்பப் பொன்இயல் வடிவும் புரைபடா உளமும் பூரண ஞானமும் பொருளும் உன்னிய எல்லாம் வல்லசித் தியும்பேர் உவகையும் உதவினை எனக்கே தன்னிகர் இல்லாத் தலைவனே நினது தயவைஎன் என்றுசாற் றுவனே