பாடல் எண் :1596
என்னா ருயிர்போல் மகளேநீ
என்ன தவந்தான் இயற்றினையோ
பொன்னார் புயனும் மலரோனும்
போற்றி வணங்கும் பொற்பதத்தார்
தென்னார் ஒற்றித் திருநகரார்
தியாகர் எனும்ஓர் திருப்பெயரார்
கொன்னார் சூலப் படையவரைக்
கூடி உடலம் குளிர்ந்தனையே
பாடல் எண் :1898
என்னா ருயிர்க்குப் பெருந்துணையா
மெங்கள் பெருமா னீரிருக்கு
நன்னா டொற்றி யன்றோதா
னவில வேண்டு மென்றுரைத்தேன்
முன்னா ளொற்றி யெனினுமது
மொழித லழகோ தாழ்தலுயர்
விந்நா னிலத்துண் டென்கின்றா
ரிதுதான் சேடி யென்னேடீ
பாடல் எண் :2033
என்னா ருயிர்க்குயிராம் எம்பெருமான் நின்பதத்தை
உன்னார் உயிர்க்குறுதி உண்டோ தான் - பொன்னாகத்
தார்க்கும் சதுமுகர்க்கும் தானத்த()வர்க்குமற்றை
யார்க்கும் புகலுன் அருள்
பாடல் எண் :4990
என்னா ருயிர்க்குத் துணைவ நின்னை நான்து திக்க வே
என்ன தவஞ்செய் தேன்முன் உலகு ளோர்ம திக்க வே
பொன்னார் புயனும் அயனும் பிறரும் பொருந்தல் அரிய தே
புலைய னேனுக் களித்த கருணை மிகவும் பெரிய தே எனக்கும் உனக்கும்
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.