என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம் என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம் பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம் பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம் அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம் அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம் சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்