என்னிறை வாஇமை யோரிறை வாமறை யின்முடிபின் முன்னிறை வாமலை மின்னிறை வாமலர் முண்டகத்தோன் தன்னிறை வாதிதித் தானிறை வாமெய்த் தபோதனருள் மன்னிறை வாஇங்கு வாஎன் றெனக்குநல் வாழ்வருளே
என்னிறை யான மருந்து - மகிழ்ந் தெனக்குத்தன் பொன்மேனி ஈந்த மருந்து தன்னறி வாகு மருந்து - என்னைத் தந்த மருந்தென்றன் சொந்த மருந்து ஞான