பாடல் எண் :3019
என்னுயிரில் கலந்துகலந் தினிக்கின்ற பெருமான்
என்இறைவன் பொதுவில்நடம் இயற்றும்நட ராஜன்
தன்னைஅறி யாப்பருவத் தென்னைமணம் புரிந்தான்
தனைஅறிந்த பருவத்தே எனைஅறிய விரும்பான்
பின்னைஅன்றி முன்னும்ஒரு பிழைபுரிந்தேன் இல்லை
பெண்பரிதா பங்காணல் பெருந்தகைக்கும் அழகோ
கன்னல்என்றால் கைக்கின்ற கணக்கும்உண்டோ அவன்றன்
கணக்கறிந்தும் விடுவேனோ கண்டாய்என் தோழீ
பாடல் எண் :4208
என்னுயிரில் கலந்துகொண்டார் வரில்அவர்தாம் இருக்க
இடம்புனைக என்கின்றாள் இச்சைமய மாகித்
தன்னுயிர்தன் உடல்மறந்தாள் இருந்தறியாள் படுத்தும்
தரித்தறியாள் எழுந்தெழுந்து தனித்தொருசார் திரிவாள்
அன்னமுண அழைத்தாலும் கேட்பதிலாள் உலகில்
அணங்கனையார் அதிசயிக்கும் குணங்கள்பல பெற்றாள்
மின்னிவளை விழைவதுண்டேல் வாய்மலர வேண்டும்
மெய்ப்பொதுவில் நடம்புரியும் மிகப்பெரிய துரையே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.