பாடல் எண் :3541
என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன்
இசைத்தவிண் ணப்பம்ஏற் றருளி
உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள்
உறுகண்மற் றிவைஎலாம் ஒழித்தே
நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம்
நிரப்பியாட் கொள்ளுதல் வேண்டும்
மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே
வள்ளலே சிற்சபை வாழ்வே
பாடல் எண் :4293
என்னுயிர் நாதனை யான்கண் டணைதற்கே
உன்னுவ தென்னைகண் டாய் - நெஞ்சே
உன்னுவ தென்னைகண் டாய்
பாடல் எண் :4416
என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர்
இன்னுயிர் ஆயினீர் வாரீர்
என்னுயிர் நாதரே வாரீர் வாரீர்
பாடல் எண் :5079
என்னுயிர் உடம்பொடு சித்தம தே
இனிப்பது நடராஜ புத்தமு தே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.