என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை எழுமையும் காத்தருள் இறைவா என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே எனக்கறி வுணர்த்திய குருவே என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே எனக்கருள் புரிந்தமெய் இன்பே என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன் இசைக்கின்றேன் கேட்கஇம் மொழியே
என்னுயிர்க் கன்பா மருந்து - கலந் தென்னுயிர்க் குள்ளே இருந்த மருந்து என்னுயிர் காக்கு மருந்து - என்றும் என்னுயி ராகிய இன்ப மருந்து ஞான