என்னுரைக்கேன் என்னுரைக்கேன் இந்தஅதி சயந்தன்னை எம்ம னோர்காள் பொன்னுரைக்கும் மணிமன்றில் திருநடனம் புரிகின்ற புனிதன் என்னுள் மின்உரைக்கும் படிகலந்தான் பிரியாமல் விளங்குகின்றான் மெய்ம்மை யான தன்னுரைக்கும் என்னுரைக்கும் சமரசம்செய் தருள்கின்றான் சகத்தின் மீதே