என்னுளம்நீ கலந்துகொண்டாய் உன்னுளம்நான் கலந்தேன் என்செயல்உன் செயல்உன்றன் இருஞ்செயல்என் செயலே பின்னுளநான் பிதற்றல்எலாம் வேறுகுறித் தெனைநீ பிழைஏற்ற நினைத்திடிலோ பெருவழக்கிட் டிடுவேன் அன்னையினும் தயவுடையாய் அப்பன்எனக் கானாய் அன்றியும்என் ஆருயிருக் காருயிராய் நிறைந்தாய் மன்னுமணிப் பொதுநடஞ்செய் மன்னவனே கருணை மாநிதியே எனக்கருள்வாய் மனக்கலக்கந் தவிர்த்தே