என்னேநின் தண்ணருளை என்னென்பேன் இவ்வுலகில் முன்னே தவந்தான் முயன்றேனோ - கொன்னே படுத்தயர்ந்தேன் நான்படுத்த பாய்அருகுற் றென்னை எடுத்தொருமேல் ஏற்றிவைத்தா யே