Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :157
என்னை என்னைஈ தென்றன் மாதவம்
முன்னை நன்னெறி முயன்றி லேனைநின்
பொன்னை அன்னதாள் போற்ற வைத்தனை
அன்னை என்னும்நல் தணிகை அண்ணலே
பாடல் எண் :1699
என்னை உடையார் ஒருவேடன் எச்சில் உவந்தார் என்றாலும் 
அன்னை அனையார் ஒருமகனை அறுக்க உரைத்தார் என்றாலும் 
துன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும் 
கன்னி இதுகேள் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே
பாடல் எண் :2543
என்னை வேண்டிஎ னக்கருள் செய்தியேல் இன்னல் நீங்கும்நல் இன்பமும் ஓங்கும்நின்
தன்னை வேண்டிச்ச ரண்புகுந் தேன்என்னைத் தாங்கிக் கொள்ளும்சரன்பிறி தில்லைகாண்
அன்னைவேண்டிஅ ழும்மகப் போல்கின்றேன் அறிகி லேன்நின்தி ருவுளம் ஐயனே
மின்னை வேண்டிய செஞ்சடையாளனே விளங்கும் சித்தி விநாயக வள்ளலே
பாடல் எண் :4972
என்னை ஆண்ட வண்ணம் எண்ணில் உள்ளம் உருகு தே 
என்னை விழுங்கி எங்கும் இன்ப வெள்ளம் பெருகு தே 
உன்ன உன்ன மனமும் உயிரும் உடம்பும் இனிக்கு தே 
உன்னோ டென்னை வேறென் றெண்ணில் மிகவும் பனிக்கு தே  எனக்கும் உனக்கும்
பாடல் எண் :5003
என்னை அடிமை கொண்டாய் நானும் நினக்கு நல்ல னோ 
எல்லாம் வல்ல தலைவ நினக்கு நல்லன் அல்ல னோ 
முன்னை வினைகள் அனைத்தும் நீக்கி அமுதம் ஊட்டி யே 
மூவர்க் கரிய நிலையில் வைத்தாய் என்னை நாட்டி யே  எனக்கும் உனக்கும்
பாடல் எண் :5017
என்னை மறைத்த மறைப்பை நீக்கி என்னைக் காட்டி யே 
இறைவ நினையும் காட்டி வளர்த்தாய் அமுதம் ஊட்டி யே 
முன்னை மறைக்கும் எட்டா நினது பெருமை தன்னை யே 
முன்னி மகிழ்ந்து பாடப் புரிந்தாய் அடிமை என்னை யே  எனக்கும் உனக்கும்

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.