என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த இறைவனே திருச்சிற்றம் பலத்தே என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங் கீகுதும் என்றஎன் குருவே என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி எனக்குளே விளங்குபே ரொளியே என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங் கேற்றருள் திருச்செவிக் கிதுவே