என்னைஒன்றும் அறியாத இளம்பவருவந் தனிலே என்உளத்தே அமர்ந்தருளி யான்மயங்குந் தோறும் அன்னைஎனப் பரிந்தருளி அப்போதைக் கப்போ தப்பன்எனத் தெளிவித்தே அறிவுறுத்தி நின்றாய் நின்னைஎனக் கென்என்பேன் என்உயிர் என்பேனோ நீடியஎன் உயிர்த்துணையாம் நேயமதென் பேனோ இன்னல்அறுத் தருள்கின்ற என்குருவென் பேனோ என்என்பேன் என்னுடைய இன்பமதென் பேனே