என்னைநின் னவனாக் கொண்டுநின் கருணை என்னும்நன் னீரினால் ஆட்டி அன்னைஅப் பனுமாய்ப் பரிவுகொண் டாண்ட அண்ணலே நண்ணரும் பொருளே உன்னருந் தெய்வ நாயக மணியே ஒற்றியூர் மேவும்என் உறவே நன்னர்செய் கின்றோம் என்செய்வேன் இதற்கு நன்குகைம் மாறுநா யேனே