என்னைமண மாலைஇட்டார் என்னுயிரில் கலந்தார் எல்லாம்செய் வல்லசித்தர் எனக்கறிவித் ததனை இன்னஉல கினர்அறியார் ஆதலினால் பலவே இயம்புகின்றார் இயம்புகநம் தலைவர்வரு தருணம் மன்னியகா லையில்ஆகும் மாளிகையை விரைந்து மங்கலங்கள் புனைந்திடுக மயங்கிஐயம் அடையேல் தன்நிகர்தான் ஆம்பொதுவில் நடம்புரிவார் ஆணை சத்தியம்சத் தியம்மாதே சத்தியம்சத் தியமே