என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய் இருக்கவே இசைவித் திவ்வுலகில் மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை வள்ளல்நீ நினக்கிது விடயம் பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் பாங்கினால் உரைக்கின்றேன் எந்தாய் இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா திருந்ததோர் இறையும்இங் கிலையே