என்னையும்என் பொருளையும்என் ஆவியையும் தான்கொண்டிங் கென்பால் அன்பால் தன்னையும்தன் பொருளையும்தன் ஆவியையும் களித்தளித்த தலைவன் தன்னை முன்னையும்பின் னையும்எனக்கே முழுத்துணையாய் இருந்தமுழு முதல்வன் தன்னை அன்னையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ