என்பி றப்பினை யார்க்கெடுத் துரைப்பேன் என்செய் வேன்எனை என்செய நினைக்கேன் முன்பி றப்பிடை இருந்தசே டத்தால் மூட வாழ்க்கையாம் காடகத் தடைந்தே அன்பி றந்தவெங் காமவேட் டுவனால் அலைப்புண் டேன்உம தருள்பெற விழைந்தேன் வன்பி றந்தவர் புகழ்ஒற்றி உடையீர் வண்கை யீர்என்கண் மணிஅனை யீரே