என்பிழையா வையும்பொறுத்தாள் என்னைமுன்னே அளித்தாள் இறைவிசிவ காமவல்லி என்னம்மை யுடனே இன்பவடி வாய்ப்பொதுவில் இலங்கியநின் வண்ணம் இற்றெனநான் நினைத்திடுங்கால் எற்றெனவும் மொழிவேன் அன்புருவாய் அதுஅதுவாய் அளிந்தபழம் ஆகி அப்பழச்சா றாகிஅதன் அருஞ்சுவையும் ஆகி என்புருக மனஞான மயமாகும் என்றால் எற்றோமெய் அன்புடையார் இயைந்துகண்ட இடத்தே