என்புகல்வேன் தோழிநான் பின்னர்கண்ட காட்சி இசைப்பதற்கும் நினைப்பதற்கும் எட்டாது கண்டாய் அன்புறுசித் தாந்தநடம் வேதாந்த நடமும் ஆதிநடு அந்தமிலாச் சோதிமன்றில் கண்டேன் இன்பமய மாய்ஒன்றாய் இரண்டாய்ஒன் றிரண்டும் இல்லதுவாய் எல்லாஞ்செய் வல்லதுவாய் விளங்கித் தன்பரமாம் பரங்கடந்த சமரசப்பேர் அந்தத் தனிநடமும் கண்ணுற்றேன் தனித்தசுகப் பொதுவே