என்புடை வந்தார் தம்முகம் நோக்கி என்கொலோ என்கொலோ இவர்தாம் துன்புடை யவரோ இன்புடை யவரோ சொல்லுவ தென்னையோ என்றே வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய் அன்புடை யவரைக் கண்டபோ தெல்லாம் என்கொலோ என்றயர்ந் தேனே இன்புடை - சமு க பதிப்பு