என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம் ஈந்தனன் உம்மிடத் தெம்பெரு மானீர் இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர் என்செயல் ஒன்றிலை யாவும்நும் செயலே வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால் அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே