என்மாலை மாத்திரமோ யார்மாலை எனினும் இறைவரையே இலக்கியமாய் இசைப்பதெனில் அவைதாம் நன்மாலை ஆகும்அந்தச் சொன்மாலை தனக்கே நான்அடிமை தந்தனன்பல் வந்தனம்செய் கின்றேன் புன்மாலை பலபலவாப் புகல்கின்றார் அம்மா பொய்புகுந்தால் போல்செவியில் புகுந்தோறும் தனித்தே வன்மாலை நோய்செயுமே கேட்டிடவும் படுமோ மன்றாடி பதம்பாடி நின்றாடும் அவர்க்கே