என்றுநின் அருள்நீர் உண்டுவந் திடும்நாள் என்றுநின் உருவுகண் டிடும்நாள் என்றுநின் அடியர்க் கேவல்செய் திடும்நாள் என்றென தகத்துயர் அறும்நாள் மன்றுள்நின் றாடும் பரஞ்சுடர்க் குன்றே வானவர் கனவினும் தோன்றா தோன்றறும் ஒன்றே அருண்மய மான உத்தம வித்தக மணியே